தூத்துக்குடி: ரஜினி, கமல் போன்ற நடிகர் தனிக் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவதால் அதிமுக வுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரி வித்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி யில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியலுக்கு யார் வேண்டு மானாலும் வரலாம் என்றார். "நடிகர்கள் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. ஆனால், கட்சி ஆரம்பிக்கும் நடிகர்கள் அனை வரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது. எம்ஜிஆருக்குப் பிறகு கட்சி ஆரம்பித்த எத்தனையோ நடிகர்கள் அரசியலில் காணாமல் போய்விட்டார்கள். அரசியலில் அவர்கள் துவக்கிய கட்சி இருக் கும் இடம் தெரியாமல் போய் விட்டது.
"சஞ்சீவி மலை போல இந்தக் கட்சி நிலைத்து நிற்கும். அதிமுக ஆட்சிக்கு எந்தவித இடையூறும் அதிமுகவினரால் ஏற்படாது," என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ. முன்னதாக தூத்துக்குடியில் அதிமுகவுக்கு உறுப்பினர் சேர்த் தல் படிவம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார்.
படிவங்களை வழங்கிய பின் னர், மதுரையில் இருந்து தூத்துக் குடி வரை தொழிற்பூங்கா அமைக் கப்படும் என அவர் தெரிவித்தார். "இதுகுறித்து உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் அறிவிக்கப்படும். அதன் பின்னர் தொழிற்பூங்காவை விரைவில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
"இந்தத் தொழிற்பூங்கா அமைந்தால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமையும். வேலை வாய்ப்புகளும் பெருகும். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் கூறிய கப்பல் கட்டும் தளம் திட்டமும் விரைவில் நிறை வேற்றப்படும். தமிழன்னை சிலை நிறுவ அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது," என்றார் கடம்பூர் ராஜூ.

