வர்தா புயல் இழப்பீடு இழுத்தடிப்பு

வர்தா புயல் இழப்பீடு இழுத்தடிப்பு

1 mins read

சென்னை: வர்தா புயலில் மாய மான மீனவர்களின் குடும்பத் திற்கு இழப்பீட்டுத் தொகை குறித்து 9ஆம் தேதிக்குள் பதில் அளிக்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழகத்தை வர்தா புயல் தாக்கியது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகபட்டினம் உள் ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலின்போது கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகபட் டினம் கடற்கரையில் ஒதுங்கியது. வர்தா புயலில் பாதிக்கப்பட்ட 9 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.1 லட் சம் இழப்பீடாக வழங்கப்பட்டது.

மேலும் பேரிடர் மேலாண்மை நிதியம் சார்பில் 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என 2016 டிசம்பர் மாதம் அறிவிக்கப் பட்டது. ஆனால், தற்போது வரை புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியம் இழப் பீடு வழங்காமல் உள்ளது. எனவே அறிவித்த இழப்பீட்டுத் தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் உயர்நீதிமன்றத் தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.