போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்: ஏழு பேர் அடங்கிய கும்பல் சிக்கியது

போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட்: ஏழு பேர் அடங்கிய கும்பல் சிக்கியது

1 mins read

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மருத்துவத்துர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில் என்பர் பாஸ்போர்ட் பெற விண் ணப்பித்திருந்தார். அது தொடர்பான போலிஸ் விசாரணைக்காக அவரது வீட் டுக்கு துறையூர் போலிசார் சென் றனர். அப்போது, அப்படி ஒருவர் அந்த முகவரியில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்த செந்தில் என்ப வரை கைபேசியில் அழைத்து போலிசார் விசாரணை நடத் தியபோது அவர் கொடுத்த ஆதார் அட்டை, ரேஷன் ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவை அனைத்தும் போலியானவை என்பது தெரிய வந்தது.

அந்த நபரின் உண்மை பெயர் திருவாரூர் மாவட்டம் பரவாக் கோட்டையச் சேர்ந்த ரமேஷ் என்றும் தெரியவந்தது. இதை யடுத்து அவரிடம் மாவட்ட குற்றப் பிரிவு போலிசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருச்சி விமான நிலையப் பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட ஆறு பேர் மூலம் போலி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டதாகத் தெரி வித்தார். அதன்படி, திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி, பாலகிருஷ்ணன், பரவாக்கோட்டை ரமேஷ், துறையூர் விஜயகுமார், குளித்தலை உதய குமார், வரகனேரி சுரேஷ், சமய புரம் நடேஷ் கண்ணதாஸ் ஆகிய ஏழு பேரையும் போலிசார் கைது செய்தனர். அவர்கள் பலருக்கும் இதுபோல் போலி ஆவணங்கள் தயாரித்து வழங்கியதாகத் தெரிய வந்துள்ளது.