தப்பியோடிய கோவை ஏடிஎம் கொள்ளைக் கும்பல் தலைவன் ராஜஸ்தானில் கைது

2 mins read

கோவை: கோவை விளாங் குறிச்சி அருகே கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இரவு அடுத்தடுத்து மூன்று ஏடிஎம் மையங்களில் கேஸ்கட்டர் மூலம் உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. அதில் 2 மையங்களில் ஏடிஎம் இயந் திரத்தை உடைத்து ரூ.30.5 லட்சம் கொள் ளையடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களில் நுரைகளை தடவி நடந்த இந்த துணிகரக் கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலிசார் தனிப் படை அமைத்து தேடியதில், கால் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சில துப்புகள் கிடைத்தன. அதில் வடமாநிலக் கொள்ளையர்களின் கைவரிசை யாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

விசாரணையில், ஹரியானா மாநிலம் ஆரவல்லி மலைத்தொடரை ஒட்டியுள்ள மேவாத் என்ற பகுதியை மை ய மா க க் கொண்டு இயங்கிய கொள்ளைக் கும்பல் இந்தக் கொள்ளை யின் பின்னணியில் இருந்ததும் நாடு முழுவதும் பல மாநி லங்களில் ஏடிஎம் கொள்ளையிலும் பல கொடூர குற்றங்களில் ஈடுபட்டிருப் பதும் தெரியவந்தது. இதையடுத்து கொள்ளைப் பணத்துடன் தப்பிய கும்பல் தலைவன் இஸ்லாமுதீனைப் பிடிக்க கோவை போலிசார் தனிப் படை அமைத்து வெளிமாநிலங் களுக்குச் சென்றனர்.

இதனிடையே, அவர் ராஜஸ் தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே மானசரோவரில் கிரண், 40, என்ற பெண்ணை இஸ்லாமுதீன் (படம்) அடிக்கடி சந்திப்பது போலிசாருக்கு தெரியவந்தது. தமிழக போலிசா ரின் நடமாட்டம் அறிந்து இஸ்லாமு தீன் மானசரோவர் செல்வதைக் குறைத்துக்கொண்டார். அதனால், 10 நாட்களுக்கு முன்பு போலிசார் திட்டமிட்டு கோவை திரும்பினர்.