தேர்தலுக்கு திமுக தயார்: ஸ்டாலின்

தேர்தலுக்கு திமுக தயார்: ஸ்டாலின்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமது கட்சி நிர் வாகிகளுடன் ஆலோசனை நடத் தியபின் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது என்றார். மத்திய பட் ஜெட்டில் தமிழகத்தின் நலன் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை எனத் தெரிவித்த அவர், பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆயின? என கேள்வி எழுப்பி னார். போக்குவரத்து ஊழியர் களின் ஊதியம் பிடித்தம் செய் யப்பட்டதை அவர் கண்டித்தார்.