'எங்களுக்கே தண்ணீர் இல்லை; தமிழகத்திற்கு எப்படி கொடுப்போம்'

'எங்களுக்கே தண்ணீர் இல்லை; தமிழகத்திற்கு எப்படி கொடுப்போம்'

1 mins read
803f6317-ca4d-491e-8e23-02366ed836d5
-

பெங்களூரு: கர்நாடகத்தில் உள்ள பெரும் பாலான மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் நிலவுகிறது; கர்நாடக மக்களே நீர் இன்றி தவிக்கிறார்கள்; இந்நிலையில், காவிரி நீரை தமிழகத்துக்கு எவ்வாறு திறந்து விட முடியும்? எனக் கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும் அம்மாநில பாஜக தலைவருமான பி.எஸ்.எடியூரப்பா (படம்) கேள்வி எழுப்பினார். நாடாளுமன்ற வரவுசெலவுத் திட்டக் கூட்டத்தொடரைப் பார்வை யிட்ட பிறகு செய்தியாளர்களுக்கு எடியூரப்பா பேட்டி அளித்தார்.

அப் போது, காவிரியில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக செய்தியாளர் கள் கேள்வி எழுப்பினர். அதற்கு எடியூரப்பா பதில் அளிக்கையில், "காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் சந்தித்துப் பேசுவதில் தவறேதும் இல்லை. எங்களுக்கே (கர்நாடகம்) நீர் இல்லாத நிலையைத் தமிழகக் குழு விடம் எடுத்துக் கூறுவோம். கர் நாடகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர்ப் பஞ்சம் நிலவுகிறது. "கர்நாடக மக்களே நீர் இல்லாமல் தவிக்கின்றனர். இந் நிலையில், காவிரி நீரை தமிழ கத் துக்கு எப்படி திறந்து விட முடியும் என எதிர்பார்க்கலாம்," என்றார் அவர்.