தவறான புள்ளிவிவரங்கள்: வரவுசெலவுத் திட்டம் பற்றி மன்மோகன் சிங் கவலை

தவறான புள்ளிவிவரங்கள்: வரவுசெலவுத் திட்டம் பற்றி மன்மோகன் சிங் கவலை

2 mins read
5d4d597c-75c0-44b6-a2cf-b05b7475914a
-

புதுடெல்லி: மத்திய அரசு வரவு செலவுத் திட்டத்தில் அளிக்கப்பட்டி ருக்கும் புள்ளி விவரங்கள் தவறாக இருப் பது வருத்தமளிப்ப தாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (படம்) தெரிவித் துள்ளார். "அந்தப் புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022ஆம் ஆண் டுக்குள் விவசாயிகளின் வருமா னம் இரட்டிப்பாக உயரும் என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். அது எவ்வாறு சாத் தியப்படும்," என்று மன் மோகன் சிங் கேள்வி எழுப்பியு ள் ளார்.

2018-19ஆம் நிதி ஆண்டுக் கான வரவுசெலவுத் திட்டத்தை மத்திய அரசு நேற்று முன்தினம் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய் தது. அவர் புதுடெல்லியில் செய்தி யாளர்களிடம் கூறியதாவது: "2022ஆம் ஆண்டுக்குள் நாட் டில் உள்ள விவசாயிகள் வரு மானம் இரண்டு மடங்காக உயரும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். ஆனால், இது எந்த வகையில் சாத்தியமாகும் என்பது எனக்குத் தெரியவில்லை. "நாட்டின் வேளாண் பொரு ளியல் வளர்ச்சி 12 விழுக்காடு அடையாத வரை இந்த இலக்கை நாம் அடைய முடியாது. விவசாயி களின் வரு மான மும் இரண்டு மடங்காக உய ராது. மத் திய அரசின் வாக்குறுதி என்பது ஒரு நிழல் வாக்குறுதி அல்லது மாயை என்றே கூற வேண்டும்.

"நாட்டின் நிதிப்பற்றாக்குறை கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுகிறது. ஆனால், நிதிப்பற்றாக்குறை அதிகரித்துள் ளது. தேர்தலில் வாக்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக தாக்கல் செய்யப்பட்ட வரவுசெலவுத் திட்டம் என்று நினைக்கவில்லை. "ஆனால், என்னுடைய கவலை எல்லாம், நிதி தொடர்பாக அளித்த புள்ளிவிவரங் கள் தவறாக இருக் கின்றனவே என்பதுதான்," என் றார் மன்மோகன் சிங்.