கர்நாடகாவில் முழு அடைப்புக்குத் தடை

1 mins read

பெங்களூரு: கர்நாடகாவில் மகதாயி நதிநீர் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்று கோரி இன்று அங்கு நடைபெறவிருந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவசாயிகள் கடனை ரத்து செய்வது, மகதாயி நதிநீர் பங்கீடு பிரச்சினை உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட வேண்டும் என்பதை வலி யுறுத்தி கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத் திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே பிரதமர் மோடி பாஜக பிரசார யாத்திரை கூட்டத்தில் பங்கேற்று பேச இன்று பெங்களூரு செல்கிறார்.