'மணப்பெண் வேண்டுமென்றால் கிராமத்தை சுத்தம் செய்யுங்கள்'

'மணப்பெண் வேண்டுமென்றால் கிராமத்தை சுத்தம் செய்யுங்கள்'

1 mins read

சண்டிகர்: ஹரியானா மாநில இளைஞர்கள் திருமணம் ஆக வேண்டுமென்றால், அவர்கள் தங் களது கிராமத்தைச் சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி உள்ளார் அம்மாநிலத்தின் பஞ்சாயத்து, விவசாய அமைச்சர் ஓம் பிரகாஷ் தன்கர். கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஹரியானா மாநில சட்ட மன்றத் தேர்தலின்போதும் இவர் இதுபோன்றதொரு சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர், ஹரியானா இளைஞர்களுக்கு பீகார் மாநி லத்தில் இருந்து மணப்பெண் கொண்டு வருவதாக தேர்தல் வாக்குறுதி தந்திருந்தார். இந்நிலையில், ஹரியானா கிரா மங்களின் தரத்தை உயர்த்துவதற் காக ஏழு நட்சத்திர முறையை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பஞ்சாயத்துத் துறையினர் நடை முறைப்படுத்த உள்ளனர். இதன்படி ஒவ்வொரு கிராமத் திற்கும் அதன் மேம்பாட்டைப் பொறுத்து மூன்று முதல் ஏழு நட்சத்திரத் தகுதி வழங்கப்படும்.

எனவே கிராமத்தின் தரத்தை உயர்த்த இளைஞர்களை ஊக்கு விக்கும் வகையில் பேசிய அவர், தங்களது கிராமம் அதிக நட்சத்திர தகுதிபெற இளைஞர்கள் உழைத்தால் அவர்கள் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்கும் வாய்ப்பு அதிகம் என்றார். "கிராமங்களுக்கான இந்த நட் சத்திரத் தகுதி அக்கிராமத்தை மேம்படுத்துவதுடன், இளைஞர் கள் திருமணம் செய்துகொள்ள நல்ல மணப்பெண் கிடைக்கவும் வழி வகுக்கும்.