போஃபர்ஸ் ஊழல் வழக்கு: சிபிஐ மேல்முறையீடு

1 mins read

புதுடெல்லி: போஃபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு தொடர்பாக புதிய ஆதாரங்கள் சிக்கியதாகக் கூறப்படும் நிலையில் உச்ச நீதி மன்றத்தில் சிபிஐ மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக புகார் கூறப்பட்ட இந்துஜா சகோ தரர்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் 2005ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அப்போது சிபிஐ திட்டமிட்டது.

ஆனால், அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு இதற்கு அனுமதி வழங்க வில்லை எனக் கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன், போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் விவகாரம் தொடர்பாக, தனியார் துப்பறிவாளர் மைக்கேல் ஹெர்ஷ் மாம் சில குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டு களை விசாரிக்கப்போவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்துஜா சகோ தரர்களுக்கு எதிரான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய 12 ஆண்டுகளுக்குப் பின் அனு மதி கேட்டு கடந்த அக்டோபர் மாதம் மத்திய அரசுக்கு சிபிஐ கடிதம் எழுதியது. இதற்கு மத் திய அரசு அனுமதி அளித்தது.