சரத்குமார், சீமான் இணைந்து செயல்பட முடிவு

சரத்குமார், சீமான் இணைந்து செயல்பட முடிவு

1 mins read
6981e41a-4ef7-4a23-8f11-7fa5c66766bd
-
Google News Preferred Icon

மதுரை: நடிகர்கள் சரத்குமாரும் சீமானும் அரசியல் களத்தில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளனர். தமிழக நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக இருவரும் தெரிவித் துள்ளனர். தமிழக அரசியல் களத்தில் திரையுலகப் பிரமுகர்களின் வருகையும் ஆதிக்கமும் அதிக ரித்து வருகின்றன. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து சீமான் காட்டத்துடன் விமர் சித்து வருகிறார். சரத்குமாரும் தமது விமர் சனங்களை முன் வைத்துள்ளார். இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் இணைந்து செயல்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் மதுரையில் செய்தி யாளர்களிடம் பேசிய சரத்குமா ரும் சீமானும், தமிழகத் தில் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கிய ஜெயலலிதாவை இழந்து அதிமுக பல்வேறு பிரச் சினைகளை சந்தித்து வருவ தாகக் குறிப்பிட்டனர். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், தமிழக வளர்ச் சிக்கென எந்த திட்டமும் இல்லை என்றும், தனி நபர் வருமான உச்சவரம்பை உயர்த் தாதது வேதனையானது என் றும் இருவ ரும் விமர்சித்தனர். "கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை. இனி எஞ்சியிருக்கும் ஆட்சிக் காலத் தில் எதுவும் செய்ய முடியாது," என சீமானும் சரத்குமாரும் மேலும் தெரிவித்தனர்.