சென்னை: ரஜினி, கமல் ஆகியோரைத் தொடர்ந்து நடிகர் விஷாலும் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மறுக்காத விஷால், உள் ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததும் கட்சி தொடங்குவது குறித்து அறிவிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷா லும் போட்டியிட இருந்தார். எனினும் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால், அவரால் தேர்தல் களம் காண முடியவில்லை. இந்நிலையில் கமல்ஹாசனைப் போலவே விஷாலும் நாட்டு நடப்புகள், சமூக பிரச்சினைகள் குறித்து தனது கருத்துக்களை, விமர்சனங்களை வெளிப்படையாகச் சொல்லி வருகிறார்.
"ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய் ததால் நான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டடேன். மக்களுக்கு நல்லது செய்வதே எனது நோக்கம். "தமிழகத்தில் விரைவில் உள் ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேதி அறிவிக்கப்பட்டதும், புதுக்கட்சி தொடங்குவது குறித்து முடிவெடுத்து அறிவிப்பேன்," என்று விஷால் மேலும் தெரிவித்துள்ளார். புதுக்கட்சி துவக்கத்துக்கான ஏற்பாடுகளை அவரது ரசிகர்கள் செய்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

