சமாதானப் படலம்: சசியுடன் அமைச்சர்கள் ரகசியப் பேச்சு

சமாதானப் படலம்: சசியுடன் அமைச்சர்கள் ரகசியப் பேச்சு

2 mins read
1fd72ad5-4414-4ccb-90d3-47dcea6bbfa8
-
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் மிக விரைவில் ஆட்சி மாற்றம் நிகழும் என டிடிவி தினகரன் தரப்பினர் கூறி வரும் நிலையில், ஆட்சியை தக்கவைக்கும் பொருட்டு சசிகலா தரப்புடன் ஆளும் தரப்பு அமைச்சர்கள் ரகசியப் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக தமிழக ஊடகம் பரபரப்புத் தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் டிடிவி தினக ரனை தனிமைப்படுத்தவும் ஆட்சி யாளர்கள் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தினகரனின் ஆதரவாளர்க ளான அதிமுக எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக் கப்பட்டுள்ளது. அந்த வழக்கின் மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

இந்த வழக்கில் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டது செல்லாது என நீதிமன்றம் அறிவிக்கும் பட்சத்தில், அதிமுக ஆட்சிக்கு சிக்கல் ஏற்படும். முதல்வர் பழனி சாமி சட்டப்பேரவையில் பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாவார். இதனால் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க திமுகவும், தினகரன் தரப்பினரும் முயற்சி செய்ய வாய்ப்புள்ளதாக தமிழக ஊடகம் கணித்துள்ளது.

இதையடுத்து ஆட்சியை பறி கொடுப்பதற்குப் பதிலாக சசிகலா தரப்புடன் சமாதானப் போக்கை கடைபிடிக்க அதிமுக ஆட்சியாளர் கள் முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே, தமிழக அரசின் ஆயுள் அமையும். எனவே, அனைத்து கட்சியினரும் தீர்ப்பை எதிர்நோக்கி உள்ளனர். இதற்கிடையே, சசிகலா தரப்பி னருடன் ஆளும் கட்சி சார்பில் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சசிகலாவுடன் எடப்பாடி, ஓபிஎஸ். கோப்புப் படம்: தகவல் ஊடகம்