புதுடெல்லி: வடஇந்திய மக்க ளைக் காட்டிலும் ஆந்திரா, தமிழ் நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தென் னிந்திய மக்களே தங்களது உடல் நலன் குறித்து அதிக அக்கறை காட்டுவதாக மத்திய அரசு வெளி யிட்டுள்ள தேசிய குடும்ப நல ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. தங்களுக்கும் தங்கள் குடும் பத்தினருக்கும் மருத்துவக் காப் பீடு பெறுவதில் ஆந்திரா, தமிழ் நாடு, தெலுங்கானா மாநில மக்கள் அதிகம் கவனம் செலுத்துவதாக வும் உத்தரப்பிரதேசம், பீகார், அசாம் மாநில மக்கள் காப்பீடு பெறுவதில் அக்கறை செலுத் தாமல் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
மருத்துவக் காப்பீடு பெற்ற அதிக மக்களைக் கொண்ட மாநிலங்களின் பட்டியலில், சுமார் 75% மருத்துவக் காப்பீடு பெற் றுள்ள மக்களுடன் ஆந்திரா முதலிடத்தில் உள்ளது. அதேசமயம் லட்சத் தீவுகள், மணிப்பூர், ஜம்மு-காஷ்மீர் மாநிலங் களில் 5%க்கும் குறைவான குடும் பங்களே மருத்துவக் காப்பீடு பெற்றுள்ளன.

