கொலை செய்ய வந்த கூலிப் படையினருக்கு தர்ம அடி

கொலை செய்ய வந்த கூலிப் படையினருக்கு தர்ம அடி

1 mins read

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், தவுலானா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஒருவரைக் கொல்ல முயன்ற கூலிப் படையினர் இருவரை பொதுமக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்துத் துவைக்கும் காட்சிகள் காணொளியாக இப்போது வெளியாகி உள்ளன. தவுலானா பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சபா சிங்கை கொலை செய்ய கூலிப்படையினர் துப்பாக்கிகளுடன் வந்துள்ளனர். அவர்களை சுற்றி வளைத்த மக்கள் அவர்களை மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். அவர்களிடம் இருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து காவல் துறையினரிடம் ஒப்படைத் தனர். கூலிப்படையின ரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சபா சிங்கை கொல்ல ஒரு லட்சம் முன்பணம் பெற்றது தெரியவந்தது.