காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கோயில் களுள் பிரசித்திபெற்றது வழக் கறுத்தீஸ்வரர் கோயில். இக் கோயிலில் 16 வாரங்கள் விளக் கேற்றி வழிபட்டுவந்தால் தீராத வழக்குகளும் தீர்ந்து நிம்மதி கிடைக்கும் என்பது ஐதீகம். ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் வழக்கிலிருந்து கனிமொழி விடு பட வேண்டும் என்பதற்காக திமுக எம்பியாக இருந்த வசந்தி ஸ்டான்லி, ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், வழக்குகள் பிரச் சினை காரணமாக மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போன்றோர் இந்தக் கோயிலில் வழிபட்டிருக்கிறார்கள்.
பிரபலங்களின் வழக்குகள் தீர்ந்ததால் அவர்களுக்கு இந்தக் கோயில் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. இவ்வாறு புகழ்பெற்ற அந்தக் கோயிலின் வளாகத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து கோயிலுக்குச் சென்ற விஷ்ணு காஞ்சிபுரம் காவல் நிலையத்தினர் கோயிலில் சோதனை மேற்கொண் டனர். அப்போது, அங்குள்ள தொட்டிகளில் கஞ்சாச் செடி வளர்த்து வந்ததை அவர் கள் கண்டறிந்தனர். விசாரணை யில் அந்தச் செடிகளை மூர்த்தி என் பவர் வளர்ப்பதாகத் தெரிய வந் தது. அதனைத் தொடர்ந்து மூர்த்தியை கைது செய்த போலி சார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

