புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள வளம்பட்டியில் தஞ்சை= புதுகை நெடுஞ்சாலையில் டிப்பர் லாரியும் ஸ்விஃப்ட் காரும் நேற்று அதிகாலை நேருக்கு நேர் மோதி யதில் மூன்று பேர் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தனர். புதுக்கோட்டை நகருக்கு அரு கில் உள்ள திருவப்பூரைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சுந்தர் ராஜன். இவரும் இவருடைய நண் பர் கனகராஜ் என்பவரும் தஞ் சாவூரில் நடைபெறும் விசேஷம் ஒன்றில் கலந்துகொள்வதற்காக அதிகாலை ஐந்து மணிக்கு காரில் சென்றனர்.
அப்போது தஞ்சாவூர் பகுதியி லிருந்து மணல் ஏற்றிச் செல்வதற் காக டிப்பர் லாரியை மஞ்சப்பேட் டையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஓட்டிவந்திருக்கிறார். இந்த இரண்டு வாகனங்களும் கந்தர்வக்கோட்டை வளம்பட்டியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள் ளாயின.
மோதிய வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந் தது. கார் மிக மோசமாக பாதிப்புக்குள்ளாகி சாலையிலேயே நின்றது. கார் ஓட்டுநர், சுந்தர்ராஜன், கனக ராஜ் ஆகிய மூவரும் சம்பவ இடத் திலேயே மாண்டனர். சம்பவ இடத் துக்கு விரைந்துவந்த போலிசார் சிறு காயங்களுடன் இருந்த டிப்பர் லாரி ஓட்டுநர் மணிகண்டனை மீட்டனர். இவ்விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். படம்: தமிழக ஊடகம்

