சென்னை: கட்டணம் குறைக்கப் பட்டதால் அரசுப் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிக ரித்துள்ளதாகத் தகவல்கள் தெரி விக்கின்றன. தற்போது தினசரி வசூல் அளவு ரூ.4 கோடி உயர்ந்துள்ளது. அண்மையில் அரசுப் பேருந்து களின் கட்டணம் 60 விழுக்காடு உயர்த்தப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். பேருந்து கட்ட ணத்தை விட ரயில் கட்டணம் குறைவாக இருப்பதாக விமர் சனங்கள் எழுந்தன. சுமார் 25 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளைப் புறக்கணித்து விட்டு தனியார் பேருந்து, ரயில் போன்ற மாற்று போக்குவரத்தை பயன்படுத்தத் தொடங்கினர்.
இதையடுத்து உயர்த்தப்பட்ட கட்டணம் சிறிதளவு குறைக்கப் பட்டது. இதனால் 8 முதல் 9 லட்சம் பேர் வரை மீண்டும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படு கிறது. தற்போது விரைவுப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் மீண்டும் அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்துவதால் பேருந்து நிலையங்களில் வழக்கம் போல் பயணிகள் கூட்டம் காணப்படுகிறது. படம்: தமிழகத் தகவல் ஊடகம்

