குமரி: கல்வித்துறை என்பது முன்பு சேவை துறையாக இருந்தது என்றும் கல்வி என்பது தற்போது வியாபாரமாகி விட்டது என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், ஊழல் தேசியமயமாக்கப்பட்ட நாட்டில் கல்வித்துறையில் ஊழல் நடப்பது பெரிய வி ஷயம் அல்ல என்று குறிப்பிட்டார். மூன்று அல்லது நான்கு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துதான் பலர் துணைவேந்தர் பதவிக்கு வருவதாகக் குறிப்பிட்ட சீமான், அப்படி பதவி பெறுபவர்கள் எப்படி நியாயமாக நடந்துகொள்வார்கள் எனக் கேள்வி எழுப்பினார்.
"இதனால் ஒரு துணைவேந்தர் இப்போது கைதாகி இருக்கிறார். இதுபோல இன்னும் பல துணை வேந்தர்கள் வெளியே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். "நாம் தமிழர் கட்சிக்கு தமிழகத் தில் ஆட்சி அமைக்க வாய்ப்பு தந்தால் ஒரு மீனவரைக் கூட சிங் கள கடற்படை பிடிக்கமுடியாது. அப்படி பிடித்தால் பதவி விலகி விடுவோம். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி காலூன்றிவிடலாம் என்ற கனவு ஒருபோதும் பலிக்காது," என்றார் சீமான்.

