ஜெயக்குமார்: முதல்வர் பதவியைக் கைப்பற்ற திட்டமிடுகிறார் ஸ்டாலின்

ஜெயக்குமார்: முதல்வர் பதவியைக் கைப்பற்ற திட்டமிடுகிறார் ஸ்டாலின்

2 mins read
16130b32-eeb2-44a4-88a9-50821334c7b6
-

சென்னை: திமுக ஆட்சிக் கட்டி லில் ஏறும் என்பது நடக்காத ஒன்று என அமைச்சர் ஜெயக் குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் வளர்ச்சியை மனதிற்கொண்டே மத்திய அரசு டன் சுமுகமான உறவைத் தமிழக அரசு பேணி வருவதாக சென்னை யில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர் கூறினார். அதிமுக அரசை வீழ்த்த வேண்டும் என்பதே ஸ்டாலினு டைய ஒரே நோக்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், அரசுக்கு நெருக்கடி கொடுப்பதன் மூலம் முதல்வராக ஸ்டாலின் திட்டமிடுவ தாகச் சாடினார்.

"ஸ்டாலினின் முதல்வர் கனவு நிறைவேறாது. காலஞ்சென்ற முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மாநில சுயாட்சியைப் பேணிப் பாதுகாக்கிறோம். "மத்தியில் காங்கிரஸ் கூட்ட ணியில் திமுக இருந்தபோது இலங்கையில் உச்சகட்ட போர் நடைபெற்றது. அப்போது திமுகவுக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி நெருக்கடி தந்தாரா? முள்ளிவாய்க்கால் படுகொலையில் ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

திமுகவுக்கான கரும்புள்ளியாக, தலைக் குனிவாக இந்த வரலாற்றுப் பிழை அமைந்திருக்கிறது," என்றார் அமைச்சர் ஜெயக்குமார். இந்நிலையில், தமிழகத்தில் நடைபெறும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடிக்க வாய்ப்பில்லை என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் கூறியுள்ளார். சென்னையில் நீட் தேர்வுக்கு எதிராக நேற்று முன்தினம் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்றுப் பேசிய அவர், அதிமுக ஆட்சி அடுத்த வாரமே கலையக் கூடிய வாய்ப்புள்ளதாகக் குறிப் பிட்டார்.

திமுக எம்எல்ஏவின் இந்தப் பகிரங்க பேச்சு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு அறிவிக் கப்படக்கூடும். தீர்ப்பு தினகரன் அணிக்கு சாதகமாக அமையும் பட்சத்தில், நடப்பு அதிமுக அரசு பெரும்பான்மையை இழக்கும். அதை மனதிற்கொண்டே ஜெ. அன்பழகன் ஆருடம் வெளியிட்டி ருப்பதாக அரசியல் கவனிப் பாளர்கள் கருத்து தெரிவித் துள்ளனர்.

"என்னைப் பொறுத்தவரை யில் எடப்பாடி அரசு பதவி விலகத் தேவை இல்லை. இந்த அரசுக்கு 111 எம்எல்ஏக்கள்தான் ஆதரவு தந்துள்ளனர். "இந்த அரசு நீதிமன்றத்தின் படிகளிலே இருக்கிறது. அடுத்த வாரம் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு வரும்போது இந்த அரசு தானாகவே கவிழும்," என்று ஜெ. அன்பழகன் மேலும் கூறியுள்ளார்.