தேனி: நியூட்ரினோ திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் தேனி மாவட்டம் வளர்ச்சி காணும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த தமிழக அரசு ஒப்புக் கொண்டுவிட்டதா எனும் சந்தேகம் எழுந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி கொடுக்கக்கூடாது என்றும் அவர்கள் மீண்டும் வலியுறுத்தி உள்ளனர். "தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைந்தால் மாவட்டம் வளர்ச்சி காணும். இதை அனைவரும் உணர வேண்டும்," என்று பாண்டியராஜன் கூறியுள்ளார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க 38 கோடியே 30 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் பாண்டியராஜன் பேச்சு: சமூக ஆர்வலர்கள் கவலை
1 mins read
-

