கதிராமங்கலம்: எனக்கு முதல் வர் பதவி மீது துளியும் ஆசை கிடையாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் 18 எம்எல்ஏக்களில் ஒருவருக்கே அந்தப் பதவியை நான் வழங்குவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஆறு பேரைத் தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற் படும் என்றும் தன்னுடன் வந்த 18 எம்எல்ஏக்களில் ஒருவரை முதல்வராக ஆக்குவதாகவும் டிடிவி தினகரன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் மக்கள் சந்திப்புப் பயணத்தை டிடிவி தினகரன் கடந்த 2ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.
நேற்று திருவையாறு பகுதியில் அவர் பிரசாரம் செய்தார். இதையடுத்து ஓஎன்ஜிசி நிறு வனத்தை வெளியேறக் கோரி போராட்டம் நடந்து வரும் கதிரா மங்கலம் கிராமத்துக்குத் தின கரன் நேற்று மதியம் சென்றார். அங்கு மீத்தேன் திட்ட எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமனையும் போராட்டம் நடத்தி வரும் கிராம மக்களையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், தினகரனிடம் ஒரு பாட்டிலில் தினமும் குடிநீர் கலங்கலாக வருவதைக் காண் பித்துக் குறைகளைத் தெரிவித்த னர். மேலும் ஓஎன்ஜிசி நிறுவனத்தை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அப்போது தினகரன், கதிரா மங்கலம் கிராம மக்களின் போராட்டத்துக்குத் தனது ஆதரவு என்றும் உண்டு என்று தெரிவித்தார்.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவிரி படுகையைப் பாது காக்கப்பட்ட வேளாண் மண்டல மாக அறிவிப்போம். கதிராமங் கலம் மக்களுடன் கடைசி வரை இருப்போம். இந்த மக்களுடன் எங்களது படை துணையாக நிற்கும்," என்று அவர் கூறினார். இதன்பின்னர் செய்தியாளர் களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். தமிழகத்தில் தேர்தல் நடத் தாமல் ஆட்சி மாற்றம் வருமா என்று கேட்டதற்கு, அதிமுகவில் ஆறு பேரை தவிர்த்து மற்றவர்கள் வந்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும். எனக்கு முதல் வராகும் ஆசை இல்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்னுடன் வந்த 18 எம்எல்ஏக்களில் ஒரு வரைத்தான் முதல்வராக ஆக்கு வேன். அந்த ஆறு பேர் யார் என்று கேட்டதற்கு, அவர்களும் ஒருவேளை திருந்தி வரக்கூடும் என்பதால் பெயர்களை என்னால் சொல்லமுடியாது என்றார்.

