சென்னை: நித்தியானந்தா சீடர்க ளால் தனது மகனும் பேத்தியும் மூளைச்சலவை செய்யப்பட்டதாக பாஸ்கரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் தமிழக போலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவ ரும் நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் அண்மையில் போலிசாரிடம் அளித்த புகாரில் தன்னுடைய மகன் மனோஜ் மற்றும் பேத்தி நிவேதா ஆகியோர், தங்கள் பேச்சை மீறி பிடதி ஆசிர மத்துக்குச் சென்றுவிட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.
"தாங்கள் என்ன செய்கிறோம் என்பதையே அறியாமல் இருவரும் அங்கு சென்றுவிட்டனர். நித்யானந்தா சீடர்களின் பேச்சில் மயங்கிவிட்டதாகத் தெரிகிறது. எனவே, பிடதி ஆசிரமம் சென்றவர்களை மீட்டுத் தர வேண்டும்," என்று பாஸ்கரன் தன் னுடைய புகாரில் கூறி இருந்தார். இதனையடுத்து கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ள ஆசிரமத்திற்குச் சென்ற தமிழக போலிசார் மனோஜ், நிவேதாவை மீட்டுள்ளனர். அவர்களை ஜெய மங்கலம் அழைத்து வந்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

