சென்னை: அமெரிக்காவின் ஹார் வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ திமுகவும் நிதி அளித்திருப்பதை வரவேற்பதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் (படம்) தெரிவித்துள்ளார். கூடிய விரைவில் அந்த நிதி கிடைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார். "ஹார்வர்டு பல்கலைக்கழகத் தில் தமிழ் இருக்கை அமையும் கனவு எட்டிவிடும் தூரத்தில் இருக்கிறது.
இருப்பினும், மீத முள்ள ரூ.1 கோடி நிதி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். "மேலும், தமிழில் புதிதாக 2,500 சொற்களை உருவாக்கும் பணியை கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி மேற்கொண்டு வருகிறார். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்," என் றார் அமைச்சர் பாண்டியராஜன்.
தமிழ்ச் சொற்களுக்கு காப்பு ரிமை கோரும் நிலை ஏற்படும் என்பதால், புதிய சொற்களை அரசே வெளியிடுவதாகக் குறிப் பிட்ட அவர், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாகக் கொண்டுவர, போதுமான முயற்சி களைத் தமிழக அரசு முன் னெடுத்து வருவதாகத் தெரிவித் தார். ஹார்வர்டு பல்கலையில், தமிழுக்கெனத் தனி இருக்கை அமைப்பதற்கு 40 கோடி ரூபாய் நிதி தேவைப்பட்டது. இதற்காக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்களால் முடிந்த நிதியைத் தந்து வந்தனர். தமிழக அரசு சார்பில், தமிழ் இருக்கைக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

