புதுக்கோட்டை: கரும்புத் தோட் டங்களில் கொத்தடிமைகளாக சிலர் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாகப் பரவிய தகவலை யடுத்து புதுக்கோட்டை வட்டாரங் களில் பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, கந்தர்வ கோட்டை அருகே உள்ள மட்டாங் கால் விராலிப்பட்டி பகுதியைச் சுற்றிலும் இருக்கும் ஆலைக் கரும்புத் தோட்டங்களில் அதிகா ரிகள் அதிரடி சோதனை நடவ டிக்கை மேற்கொண்டனர். இப்பகுதியில் தற்போது அறு வடைக் காலமாகும்.
இங்கு ஏராளமாக விளைந்துள்ள ஆலை கரும்பை அறுத்தெடுக்க நிறைய விவசாயத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆலைக் கரும்பை அறுத்தெடுப்பது மிக சிரமமான பணி. இதற்குத் தேவை யான தொழிலாளர்கள் புதுக்கோட் டையில் அதிகளவில் இல்லை. எனவே பிற இடங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவ ழைக்கப்படுகிறார்கள். குறிப்பாக பண்ருட்டி, கடலூர் வட்டாரங் களில் ஆலைக் கரும்பை அறு வடை செய்வதற்கு என்றே தொழில்முறையில் கைதேர்ந்தவர் கள் உள்ளனர்.
தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள். படம்: ஊடகம்

