கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை: பீகார் மாநிலத்தவர்களுடன் தமிழக போலிஸ்காரரும் கைது

கள்ளத் துப்பாக்கிகள் விற்பனை: பீகார் மாநிலத்தவர்களுடன் தமிழக போலிஸ்காரரும் கைது

1 mins read
1be73c90-723a-4b01-a030-7bcfbfbe642b
-
Google News Preferred Icon

சென்னை: கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்தது தொடர்பாக கைதானவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை தொடங்கியுள்ளது. இதன் மூலம் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம் பீகாரில் இருந்து ரயிலில் வந்த பிரதீப், கமல் ஆகிய இரு ஆடவர்கள் போலிசாரிடம் சிக்கினர். அவர்களிடம் இருந்து 6 கைத்துப்பாக்கிகள், 25 தோட் டாக்கள், ரூ.4 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் பறிமுதல் செய் யப்பட்டன.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் பேரில் தலைமைக் காவலர் பரமேஸ்வரன் என்பவர் உட்பட மேலும் நால்வர் அடுத்த டுத்து கைதாகினர். இதையடுத்து இந்தக் கும்பல் கள்ளத் துப்பாக்கிகளை விற்பனை செய்தது அம்பலமானது. தொழி லதிபர்கள், வழக்கறிஞர்கள், சமூக விரோதிகள் உள்ளிட்ட பல ருக்கும் இவர்கள் கள்ளத் துப்பாக் கிகளை விற்பனை செய்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப் பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கை சிபிசிஐடி போலிசார் விசாரிக்க காவல்துறை தலைவர் உத்தர விட்டுள்ளார். கைதான 6 பேரும் செவ்வாய்க் கிழமை அன்று திருச்சி நீதி மன்றத்தில் முன்னிலைப்படுத்தப் பட்டனர். அப்போது போலிசாரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், 6 பேரையும் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

கைதானவர்களில் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட அழைத்து வரப்பட்டார். படம்: தகவல் ஊடகம்