சென்னை விமான நிலைய அறிவிப்புப் பலகையிலிருந்து மாயமான தமிழ்மொழி

சென்னை விமான நிலைய அறிவிப்புப் பலகையிலிருந்து மாயமான தமிழ்மொழி

1 mins read
746df0ad-16b1-4f7a-935a-245a42cb4a99
-

சென்னை விமான நிலையத்தில் விமானங் களின் வருகை, புறப்பாடு குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளி லும் அறிவிப்புப் பலகைகளில் அறிவிப்புகள் இடம்பெறுவது வழக்கம். இந்நிலையில், நேற்று திடீரென தமிழ், இந்தி என இரு மொழிகளும் நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்புகள் இடம் பெற்றன. இதனால் ஆங்கிலம் தெரியாத பயணிகளும் பயணிகளை வழியனுப்பி வைக்க, அழைத்துச் செல்ல வந்தோரும் மிகுந்த அவதிக்குள்ளாயினர்.

மொழிவழி மாநிலங்களைக் கொண்டு இருக்கும் இந்தியாவில் அந்தந்த மாநில மக்கள் புரிந்துகொள்ள வசதியாக இந்தி, ஆங்கிலத்துடன் அந்தந்த மாநில மொழி களிலும் அறிவிப்புகள் வெளியிடப்படும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வரும் நிலையில் சென்னை விமான நிலையத்தில் மட்டும் திடீரென தமிழ் நீக்கப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, "காலை நேரங்களில் அதிக எண்ணிக்கையில் விமானங்கள் வந்து செல்கின் றன. மூன்று மொழிகளிலும் அறிவிப்பு செய் யும்போது தங் களது விமானம் பற்றிய தகவல் களைப் பயணிகள் தெரிந்துகொள்வதில் தாமதம் ஏற்படுகிறது," என்று விமான நிலைய இயக்குநர் கூறியதாகவும் தகவல் கள் வெளியாகின.

கள் வெளியாகின. சென்னை விமான நிலையத்தின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்ததால் மீண்டும் தமிழில் அறிவிப்புகள் வெளியாகத் தொடங்கியதாகத் தமிழக ஊடகங்கள் கூறின.