ரயில் வரும் நடைமேடையை மாற்ற லஞ்சம்

ரயில் வரும் நடைமேடையை மாற்ற லஞ்சம்

1 mins read
4aa1340e-6b13-42ab-962c-0139cdb5aad1
-

பாட்னா: ரயில் நிலையத்தில் ரயில் வரும் நடைமேடையை மாற் றுவதற்காக ரயில்வே அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பீகார் மாநிலத்தில் ரயில் நிலைய வியாபாரிகள் ரயில்கள் எந்த நடைமேடையில் வரவேண் டும் என்பதை நிர்ணயம் செய் வது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தான் 'நடைமேடை பிக்சிங்' என்று கூறுகிறார்கள்.

பீகாரில் ரயில் நிலையங்களை வந்தடையும் ரயில்கள் குறிப்பிட்ட நடைமேடையில் வந்தடைய வேண் டும் என்பதற்காக வியாபாரிகள் ரயில்வே அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பான குரல் பதிவு வெளி யாகி உள்ளது. ரயில் நிலையத்தில் வியாபா ரிகள், விற்பனையை அதிகரிக்க ரயில்வே அதிகாரிகளுக்கு 100 ரூபாய் லஞ்சம் கொடுத்துக் கடைசி நேரத்தில் தாங்கள் இருக்கும் நடைமேடையில் ரயிலை நிறுத்தச் செய்கிறார்கள் என்பது தெரியவந்து உள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக முசாப்பர்நகர் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் இடையே நடைபெற்ற பேரம் தொடர்பான குரல் பதிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற் படுத்தி உள்ளது.