பதவி பெற்றுக்கொண்டு நாடகமாட தெரியாது: தினகரன் காட்டம்

பதவி பெற்றுக்கொண்டு நாடகமாட தெரியாது: தினகரன் காட்டம்

1 mins read

சென்னை: உள்ளே அழுதுகொண்டு வெளியே சிரிக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், யார் அவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும் என்றார். "குறுக்கு வழியில் முதல்வராக வேண்டும் என நான் என்றும் நினைத்ததில்லை. அதை விரும்புவதும் இல்லை. எங்கள் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே நான் முதல்வர் ஆவேன். இவர்களைப் போல சசிகலா வழங்கிய முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டு நாடகமாட எனக்குத் தெரியாது," என்றார் தினகரன்.