நன்னடத்தை எதிரொலி: நளினி உள்ளிட்ட நால்வர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு

நன்னடத்தை எதிரொலி: நளினி உள்ளிட்ட நால்வர் விரைவில் விடுதலையாக வாய்ப்பு

2 mins read
550e6c10-6cbf-4b71-a3f0-1af473f858c3
-

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண் டனை பெற்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் நான்கு பேரை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்ய லாம் என தமிழக அரசுக்கு, மாநில சிறைத்துறை பரிந்துரை செய் துள்ளது. இந்தப் பரிந்துரையை அரசு ஏற் கும் பட்சத்தில் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகிய நால்வரும் விடுதலையாக வாய்ப் புள்ளது. இத்தகவல் அவர்களை விடுதலை செய்ய நீண்ட காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வருபவர் களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் தண் டனை பெற்றுள்ள நளினி, பேரறி வாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ கத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பின ரும் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தமிழகச் சிறையில் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை முன்கூட்டியே விடு தலை செய்யப்படுவர் என முதல் வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதையடுத்து, தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டது. எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை யொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த கைதிகளை முன்கூட்டியே விடு தலை செய்வதற்கான வழிகாட்டு தல்கள், நிபந்தனைகள் குறித்த விவரங்கள் அதில் குறிப்பிடப் பட்டிருந்தன.

இதன் பின்னர் நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்து வருப வர்களை கணக்கெடுக்கும் பணி தமிழகம் முழுவதும் நடைபெற்றது. அதன் மூலம் பத்தாண்டுகளாக சிறையில் உள்ளவர்களில் யார், யாரை விடுவிக்கலாம் எனப் பட்டியல் தயாரித்துள்ள சிறைத்துறை, அதை உள்துறை செயலருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும், அதில் நளினி, முருகன் உள்ளிட்ட நால்வரின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பரிந்துரையை அரசு ஏற்கும் பட்சத்தில், நால்வரும் விடுதலையாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.2018-02-09 06:00:00 +0800