ஸ்டாலின்: திமுகவில் கோஷ்டி மோதலுக்கு முடிவு கட்டப்படும்

ஸ்டாலின்: திமுகவில் கோஷ்டி மோதலுக்கு முடிவு கட்டப்படும்

1 mins read

சென்னை: சென்னை அறிவாலயத்தில் திருப்பூர் வடக்கு, தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், "கட்சியில் உள்ள கோஷ்டி மோதலுக்கு முடிவு கட்டப்படும்," என்று கூறினார். கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், கட்சியில் மேல் மட்டம் முதல் கீழ்மட்டம் வரை ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகவே நிர்வாகிகளும் தொண்டர்களும் செயல்படுகின்றனர். கட்சியின் நலனுக்கு முக்கியத்துவம் தராமல் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்களுக்கு கட்சி பதவிகள் வழங்கப்படுவதால் திமுக தோல்வியைச் சந்தித்து வருகின்றன," என்று கூறினர். பின்னர் பேசிய ஸ்டாலின், "மாவட்ட அளவில் நிலவும் கோஷ்டி பூசலுக்கு முடிவு கட்டப்படும். உங்கள் புகார் கடிதங்களை விசாரிக்க, மாவட்டத்திற்கு ஒரு குழு அனுப்பி வைக்கப்படும்," என்றார்.