காவிரி பற்றி ரஜினி பேசாதது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

காவிரி பற்றி ரஜினி பேசாதது ஏன் என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

1 mins read
bf34656d-1192-44ca-9308-66d5d3e07e6c
-

சென்னை: தமிழக மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார், காவிரி குறித்து ஏன் இதுவரை ரஜினி பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் 'சிஸ்டம்' சரி யில்லை என்று ரஜினி கூறியதையும் அவர் கிண்டல் செய்தார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அமைச்சர் ஜெயக் குமார், "ரஜினி என்ன பொறியியல் பட்டதாரியா?, பொறியியல் பட்ட தாரிகள்தான் 'சிஸ்டம்' சரியில்லை என்பார்கள்," என்றார். "ஆன்மீகத்தின் மூலம் மத சார்புள்ள அரசை நிறுவ விரும்பு கிறாரா என்பதை ரஜினி விளக்க வேண்டும். ஆன்மீக அரசியலை ரஜினி பேசிவிட்டுப் போகட்டும், அண்ணாவின் கொள்கைப்படி நாங்கள் செயல்படுவோம்.

"தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவுக்குச் சென்று சிஸ் டத்தை ரஜினி சரிசெய்ய வேண் டும். காவிரி விவகாரம் குறித்து ரஜினி வாய் திறக்காதது ஏன்?, அதிமுகவில் உள்ள 1.5 கோடி பேரும் வீரம் மிக்க புலிகள். தமி ழகம் அமைதிப்பூங்காவாக உள் ளது," என்று அவர் கூறினார்.