ரவுடிகளுக்கு வலை வீச்சு

ரவுடிகளுக்கு வலை வீச்சு

2 mins read

சென்னை: சென்னையில் சில நாட்களுக்கு முன்பு ஒன்றுகூடிய 75 ரவுடிகள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி யதில் பெரும்பாலான ரவுடிகள் அரசியல்வாதிகளின் அரவணைப் பில் வாழ்வதாகத் தெரிய வந்துள் ளது. இதையடுத்து தலைமறைவாக உள்ள 678 ரவுடிகளுக்கு வலை வீசப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பயங்கர ரவுடி பினு தனது கூட்டாளிகளோடு மாங்காடு அருகே வடக்கு மலையம்பாக் கத்தில் பெரிய அளவில் தனது பிறந்தநாள் விழாவை கொண் டாடியபோது, ஒரே நேரத்தில் 75 பயங்கர ரவுடிகளை பட்டாகத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களோடு காவல்துறையினர் சுற்றி வளைத் துக் கைது செய்தனர்.

பல்லு மதன் என்ற ரவுடியை சென்னை மத்திய குற்றப்பிரிவின் ரவுடி ஒழிப்பு காவல்துறையினர் பள்ளிக்கரணைப் பகுதியில் மடக்கிப்பிடித்தனர். பல்லு மதன் வெளியிட்ட தகவ லின் அடிப்படையில்தான் வடக்கு மலையம்பாக்கத்தில் 75 ரவுடி களைக் காவல்துறையினர் கூண் டோடு பிடித்தனர். ரவுடி பல்லு மதன் மீது மூன்று கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. தேனாம்பேட்டை காவல் துறையினர் அவரை தற்போது கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

காவல்துறையினர் விசாரித் ததில் ரவுடி பல்லு மதன் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளார். வடக்கு மலையம்பாக்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள பெரும் பாலான ரவுடிகள் அரசியல்வாதி களின் அரவணைப்பில் வாழ்ந்து வருவது தெரியவந்துள்ளது. ரவுடி பல்லு மதனுக்குத் தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் அரசியல் பிரமுகர் ஒருவர் பின்னணியில் உள்ளாராம். அவர் சொல்லும் வேலைகளைச் செய்யும் ரவுடி பல்லு மதன் அவரிடம் மாதந் தோறும் ஒரு பெரிய தொகையை சம்பளமாகப் பெற்று வருகிறாராம். இன்னும் பலருக்கு வலை வீசப் பட்டுள்ளது. இதில் 678 ரவுடிகள் சிக்கு வார்கள் என்று எதிர்பார்க்கப்படு கிறது.