ஆசியாவின் பணக்கார கிராமம் பாம்ஜா

ஆசியாவின் பணக்கார கிராமம் பாம்ஜா

1 mins read
b8330fa4-f06e-4e88-bcd4-b83fcc9594bc
-
Google News Preferred Icon

பாம்ஜா: ஆசியாவின் பணக்கார கிராமமாக அருணாசலப்பிரதே சத்தின் பாம்ஜா என்ற கிராமம் மாறியுள்ளது. அ ரு ணா ச் ச ல ப் பி ரே ச த் தி ல் ஒரு கிராமத்தில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுமே ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சரியம் தருகிறது. அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ளது போம்ஜா கிராமம். சுமார் 31 குடும்பங்கள் வசித்து வந்த இந்தக் கிராமத்தினரிடம் இருந்து 200.056 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவம் 5 ஆண்டுகளுக்கு முன்பு தங்களது பயன்பாட்டுக் காகக் கைப்பற்றியது.

இந்த 31 குடும்பங்களிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட நிலத் துக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய பாதுகாப்புத் துறை நேற்று விடுவித்தது. அதில், ஒரே குடும்பத்துக்கு மட்டும் ரூ.6.73 கோடி இழப் பீடாகக் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து மற்றொரு குடும்பத்துக்கு ரூ.2.45 கோடி இழப்பீட்டுத் தொகை கிடைத்தது. அனைத்துக் குடும்பங்களுக்கும் குறைந்த பட்சம் ரூ.1.09 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.

இந்தியாவிலேயே பணக்கார கிராமமாக போம்ஜா மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று செய்தி பரவிய நிலையில், அதனைப் புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் உறுதி செய்யமுடியும் என்று மாவட்ட அதிகாரி கூறியுள்ளார்.