மேற்குக் கரையில் மோடி

மேற்குக் கரையில் மோடி

2 mins read

இந்தியப் பிரதமர் தமது மத்திய கிழக்கு பயணத்தின் ஒரு பகுதியாக பாலஸ்தீனத்துக்குச் சென்றுள்ளார். நேற்று மேற்குக் கரையைச் சென்றடைந்த பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் மஹ்முட் அபாஸைச் சந்தித்துப் பேசினார். மேற்குக் கரைக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்ட முதல் இந்தியப் பிரதமர் எனும் பெருமை மோடியைச் சேரும். நேற்று முன்தினம் ஜோர்தானிய மன்னரைச் சந்தித்த மோடி, தம்முடன் சென்றிருந்த இந்தியத் தலைவர்களுடன் ஹெலிகாப்டர் மூலம் மேற்குக் கரை சென்றடைந் தார். அவரது ஹெலிகாப்டர் ரமலா வில் உள்ள அதிபர் அபாஸின் தலைமையகத்துக்கு அருகில் தரையிறங்கியதாக ஏஎஃப்பி செய்தியாளர் தெரிவித்தார்.

தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றுப்பயணத்துறை உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்தியத் தலைவர் களும் பாலஸ்தீனத் தலைவர் களும் கலந்துரையாட இருக் கின்றனர். பாலஸ்தீனத் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பிறகு பிரதமர் மோடி ஜோர்தானுக்குத் திரும்ப இருக்கிறார். தனிநாடு அமைக்க வேண் டும் என்று பாலஸ்தீனர்கள் கொண்டு இருக்கும் விருப் பத்துக்கு இந்தியா பல ஆண்டு காலமாக ஆதரவு தந்து வரு கிறது. இஸ்ரேலுடன் ஒற்றுமை யுடனும் அமைதியுடனும் இருக்கும் சுதந்திர பாலஸ்தீனம் அமைய வேண்டும் என்று மோடி ஆதரவுக் குரல் கொடுத் துள்ளார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது இந்தியாவும் இஸ்ரேலும் இணைந்து இணையப் பாதுகாப்பு, எரிசக்தி ஆகியவை தொடர்பான ஒப்பந் தங்களில் கையெழுத்திட்டன. மத்திய கிழக்குக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண் டிருக்கும் மோடி, ஒமானுக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கும் செல்கிறார்.