அனுமதி இன்றி நீண்டநாள் விடுப்பில் இருக்கும் 13,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பதவி நீக்கம் செய்ய இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது. மேலிடத்தின் அனுமதியின்றி தாமாகவே நீண்டநாள் விடுப்பு எடுத்துக்கொண்ட பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களை அடையாளம் காண வேண்டும் என்று இந்திய ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து, இந்திய ரயில்வே ஒழுங்கு நடவடிக்கை யில் மும்முரமாக இறங்கி உள்ளது. அனுமதியின்றி விடுப்பில் இருக்கும் ஊழியர் களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரி களும் மேற்பார்வையாளர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்திய ரயில்வேயில் 13 லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
விடுப்பில் இருக்கும் 13,000 ஊழியர்களை இந்திய ரயில்வே நீக்க முடிவு
1 mins read

