இந்தியாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முன்னதாகவே நடக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரிய வந்திருக்கின்றன. முக்கிய தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரசும் தேர்தலுக் கான ஆயத்தப் பணிகளை முடுக்கிவிடுவதாகத் தெரிகிறது. பொதுத்தேர்தலுக்குத் தயா ராகும்படி தன்னுடைய எல்லா மாநிலப் பிரிவுகளுக்கும் பாஜக உயர் தளபத்தியம் கட்டளையிட்டு இருக்கிறது. அதேவேளையில், மக்களின் நாடித்துடிப்பைத் திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ளும் வகையில் குழு ஒன்றை காங்கிரஸ் கட்சி அமைத்திருக்கிறது.
இந்த நிலையில், பிரதமர் நரேந் திர மோடி சுதந்திர தின உரை யாற்றும்போது முன்னதாகவே தேர்தலை நடத்துவது குறித்து அறிவிப்பு விடுக்கப்போகிறார் என்று இப்போதே பாஜக கட்சியில் பேச்சு அடிபடுகிறது. டெல்லி உட்பட பல மாநிலங் களிலும் தன்னுடைய கட்சிப் பிரிவுகளை பாஜக உசுப்பிவிட்டு இருக்கிறது. கட்சி நிலைகளைப் பலப்படுத் தும்படியும் அரசாங்கத்தின் சாத னைகளை விளக்கும்படியும் கூடு மானவரை பெரும்பாலான மக்களு டன் தொடர்புகளை வலுப்படுத்தும் படியும் பாஜக தன்னுடைய மாநிலக் கிளைகளுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

