சிகிச்சைக்குப் பின் இரண்டு இதயங்கள்; இரு நாடித்துடிப்பு

சிகிச்சைக்குப் பின் இரண்டு இதயங்கள்; இரு நாடித்துடிப்பு

1 mins read

இந்தியாவில் ஹைதராபாத் நகரில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் அப்போலோ மருத்துவமனையில் சனிக்கிழமை 56 வயது ஆடவர் ஒருவருக்கு அரிய இதய அறுவை சிகிச்சை ஒன்று நடந்தது. அவருடைய இதயம் ஒரு சிறிய காற்பந்து அளவிற்கு விரிந்திருந்தது. கரிம் நகரில் விபத்து ஒன்றில் சிக்கிய 17 வயது மேகலா நவீன் குமார் என்பவரின் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவருடைய இதயம் அதிகாரிகளின் உதவி யுடன் விரைந்து அந்த மருத்துவ மனைக்குக் கொண்டுவரப்பட்டது. இந்த இரவல் இதயம் வழக்க மான அளவில் இருந்தது.

நோயாளியின் இதயத்தை அகற்றாமல் அவருடைய இதயத் தின் புற சதைகளை சிறிய அள விற்கு அகற்றிவிட்டு அவருடைய வலது நுரையீரலுக்கும் இதயத் துக்கும் இடையில் இரவல் இதயத்தை மருத்துவர்கள் திறம் பட பொருத்தினர். இந்த அரிய சிகிச்சையை அடுத்து நோயாளியின் உடலில் இரண்டு இதயங்களும் ஒன்றுக் கொன்று உறுதுணையாக சீராக செயல்பட்டு வருகின்றன என்று தலைமை மருத்துவர் டாக்டர் கோபாலகிருஷ்ண கோகலே தெரிவித்தார். நோயாளி நன்கு குணம் அடைந்து வருவதாகவும் அவரின் உடலில் இரட்டை நாடித் துடிப்பை உணர முடிகிறது என்றும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கூறினார்.