சென்னை: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பன ஜனநாயகத்தின் இரு கண்கள் போன்றவை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் இல்லாத இந்தி யாவை உருவாக்குவோம் எனப் பிரதமர் மோடி கூறுவது பகல் கனவாகத்தான் அமையும் என்றார். "ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற பின் மோடிக்கு பயம் வந்துவிட்டது. அதன் காரணமாகத்தான் தொடர்ந்து ராகுல் காந்தி, சோனியாவை விமர்சிக்கிறார். "தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் இருந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்ட நிலையில் உள்ளது," என்றார் திருநாவுக்கரசர்.
திருநாவுக்கரசர்: பகல் கனவு காணும் மோடி
1 mins read
-

