கரூர்: மாநில உரிமையில் மத் திய அரசு தலையிடுவதாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டியுள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகா ரத்தில் தமிழக அரசு தொடர்ந்து மவுனம் சாதிப்பதாக சாடுவது நியாயமற்றது என்றார். நீட் தேர்வு கூடாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு என அவர் தெளிவுபடுத்தினார்.
"நீட் தேர்வு என்பது தமிழகத் தின் உரிமையைப் பறிக்கும் செயலாகும். எத்தனை மருத்து வர்கள், பொறியியலாளர்கள் வேண்டும் என முடிவு செய்வ தெல்லாம் மாநில உரிமை. இதில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்ற ஒன்று. "நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி செயல்படுத்துவது வருத்த மளிக் கிறது. மாநில சுயாட்சி உரிமைகளைக் காக்க நீட் தேர்வு போன்றவற்றை நிரந்தரமாக வர விடாமல் தடுப்பதற்கான பணி களில் ஈடுபட்டுள்ளோம்," என்றார் தம்பிதுரை.

