அமைச்சர்: திமுக நிதி வந்து சேரவில்லை

1 mins read
b5093fe0-4009-462b-815a-216eb8a03d21
-

சென்னை: ஹார்வர்டு பல்கலைக் கழக தமிழ் இருக்கைக்கு திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நிதியை நேரடியாகத் தங்களிடம் வழங்க திமுக தலைமைக்கு தயக்கமாக இருந்தால் அண்ணா உருவாக்கிய தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அந்த நிதியை வழங்கலாம் என்று செய்தியாளர் களிடம் அவர் கூறினார். "நிதியை விரைவில் கொடுத் தால் மகிழ்ச்சி அடைவோம். தமிழ் இருக்கை அமைவதற்கான நிதியை ஓர் அரசியல் கட்சியாக வழங்க லாமா? என்று திமுக சார்பில் ஹார்வர்டு பல்கலைக்கழக நிர்வா கத்திடம் கேட்டிருப்பதாகவும், அவர்களின் பதிலுக்காக காத்தி ருப்பதாகவும் திமுக சார்பில் ஆறுமுக முருகையா தெரிவித்தார்.

"தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலம் அளித்தால் எந்தவித சங்க டமும் இருக்காது. எனவே ஹார் வர்டு பல்கலைக்கழக நிர்வாக பதிலை எதிர்பார்க்காமல் அந்த நிதியை விரைவில் வழங்கினால் மிகவும் மகிழ்ச்சி," என்றார் அமைச்சர் பாண்டியராஜன்.