காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

1 mins read
9150bcd0-e86b-4810-816c-30aaa873e800
-
Google News Preferred Icon

காதலர் தின கொண்டாட்டத்துக்கு எதிராக சில அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று காலை இந்து மக்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பெசன்ட்நகர் கடற்கரையில் திரண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு காதலர் தினத்துக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தாலி, தேங்காய், பூ, பழங்கள், வேட்டி, சட்டை, சேலை ஆகியவற்றுடன் சீர்வரிசை தட்டுகளைக் கொண்டு வந்திருந்தனர். கடற்கரையில் இருந்த காதலர்களை அணுகி, "இதுபோன்று கடற்கரையில் அமர்ந்து பேசாமல், தாலி கட்டி கணவன், மனைவியாக வாழ்க்கையைத் தொடங்குங்கள்," என்று அறிவுறுத்த முயன்றபோது, போலிசார் அனைவரையும் கைது செய்தனர். படம்: தமிழக தகவல் ஊடகம்