நீலகிரி: தலைக்குந்தா பகுதியில் திடீரென பூமியில் பிளவு ஏற்பட்டு கரும்புகை வெளியேறி வருவது ஊட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்குள்ள நீத்தி வனப்பகுதியில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் அவ்வப்போது பூமியில் பிளவு ஏற்படுவதுடன் கரும்புகையுடன் தீப்பிழம்புகளும் வெளிப்படுவதாக அங்குள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுவரை 500க்கும் மேற்பட்ட கற்பூர மரங்களின் வேர்ப்பகுதி முற்றிலும் கருகி, மரங்கள் தரையில் சாய்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. பூமிக்கடியில் மீத்தேன் வாயு அதிக அளவில் வெளியேறுவதால் தீ மூண்டு, கரும்புகை வெளிப்படுவதாக புவியியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பூமியில் திடீர் பிளவுகள்: மக்கள் பீதி
1 mins read

