சாலையில் நடந்துசெல்லும் பெண் களிடம் மோட்டார்சைக்கிளில் வந்து கொள்ளையர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவது அதிகரித்து இருப்பது சென்னை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மூன்று சங்கிலி பறிப்பு சம்பவங் கள் அரங்கேறின. அவை தொடர் பாக கண்காணிப்புப் படக்கருவி களில் பதிவான காணொளிகள் வேகமாகப் பரவி வருகின்றன. வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் எஸ்.மேனகா.
அரும்பாக்கத் தில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காலை 7.30 மணியளவில் அவர் சாலை யில் நடந்துசென்றார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த கொள் ளையர்கள் அவருடைய 13 சவரன் தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன் றனர். இதனால் திருமதி மேனகா நிலைதடுமாறி விழுந்தபோதும் மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்தவன் சிறிதும் இரக் கம் காட்டாமல் சங்கிலியைப் பிடித்து இழுக்க, கிட்டத்தட்ட 25 அடி தூரத்திற்குத் தரதரவென அவர் இழுத்துச் செல்லப்பட்டார்.
சங்கிலிப் பறிப்புச் சம்பவங்கள் தொடர்பாக கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளைக் கண்டு சென்னை மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காணொளிப்படங்கள்

