அமைச்சர்கள்: அதிமுக தொண்டர்கள் கைகாட்டுவோருக்கே அரசு வேலை, இலவச சலுகைகள்

அமைச்சர்கள்: அதிமுக தொண்டர்கள் கைகாட்டுவோருக்கே அரசு வேலை, இலவச சலுகைகள்

1 mins read
6b2278c7-f97f-43bd-a9b8-5cfdfb0235ec
-

தமிழ்நாட்டை ஆட்சிபுரியும் அதிமுக அமைச்சர்கள் புதிய அறி விப்புகள் மூலம் பிரச்சினை களைக் கிளப்பிவிட்டு இருப்ப தாகக் கூறப்படுகிறது. மதுரையில் அதிமுக கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் இயக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு பேசிய கூட்டுறவுத் துறை அமைச் சர் செல்லூர் கே ராஜு, அதிமுக உறுப்பினர் அட்டையைக் கொண் டிருப்போருக்கு மட்டுமே அரசாங்க இலவச நல்வாழ்வு திட்டங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார்.

"உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சி உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கவேண்டும். அது இருந் தால்தான் உங்களுக்கோ அல்லது உங்கள் குடும்பத்தாருக்கோ அர சாங்க இலவச உதவிகள் கிடைக் கும்," என்று அமைச்சர் பேசினார். இருந்தாலும் இதை பின்னர் அவரே மறுத்தார். ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்ட சிலர் நல்வாழ்வுத் திட்டங்கள் எல்லாருக்கும் உரியவை என்று பின்னர் விளக்கினர்.

இதனிடையே, தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே ஏ செங்கோட்டையன், அதிமுக தொண்டர்கள் பரிந்துரைப் போருக்கு மட்டுமே வேலை வாய்ப் புகள் வழங்கப்படும் என்றார். "நீங்கள் கவலையேபடவேண் டாம். எதிர்காலத்தில் நீங்கள் யாரை கைகாட்டுகிறீர்களோ அவர் களுக்குத்தான் வேலை," என்று அமைச்சர் கோபிசெட்டிப்பாளையத் தில் தொண்டர்களிடையே பேசிய போது குறிப்பிட்டதாக என்டிடிவி தெரிவித்துள்ளது. "முதல்வரும் துணை முதல் வரும் நாங்களும் இருந்த கட்சி யின் உயர் தளபத்திய கூட்டத்தின் போது இந்த யோசனை தெரிவிக் கப்பட்டது. இதற்கான உறுதியும் வழங்கப்பட்டது," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.