பணக்கார முதல்வர் நாயுடு; ஏழை மாணிக்

பணக்கார முதல்வர் நாயுடு; ஏழை மாணிக்

1 mins read
1bbd54d2-3f1a-4537-b7b0-2691dc9c3afa
-
Google News Preferred Icon

இந்தியாவில் பதவியில் இருக்கும் 31 முதல்வர்களில் ஏறக்குறைய 25 பேர் கோடீஸ்வரர்கள். அவர் களில் இரண்டு பேருக்கு ரூ. 100 கோடிக்கும் அதிக சொத்து இருக் கிறது. ஆந்திரப்பிரதேசத்தின் முதல்வர் சந்திரபாயு நாயுடுதான் ரூ. 177 கோடி மதிப்புள்ள சொத்து களுடன் பெரும் பணக்கார முதல் வராக இருக்கிறார். அருணாச்சலப்பிரதேச முதல் வர் கந்து, ரூ. 129 கோடி சொத்துடன் இரண்டாவது பணக் கார முதல்வராக உள்ளார்.

இதில், பஞ்சாப் முதல்வர் அம்ரீந்தர் சிங் மூன்றாவது இடத் தில் இருக்கிறார். இவரின் சொத்து மதிப்பு ரூ. 48 கோடி. இந்த விவரங்களை ஜனநாயக சீர்திருத்தச் சங்கம் (ADR) என்ற அமைப்பும் தேசிய தேர்தல் கண் காணிப்பு அமைப்பும் வெளியிட்டு உள்ள அறிக்கை தெரிவிக்கிறது. திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மாணிக் சர்க்கார் வெறும் ரூ. 26 லட்ச சொத்துடன் பரம ஏழை முதல்வராக இருக்கிறார். ஏழை முதல்வர்கள் பட்டியலில் மேற்குவங்க முதல்வர் மம்தா (ரூ. 30 லட்சம்), ஜம்மு காஷ்மீர் முதல் வர் மெஹபூபா முப்தி (ரூ. 55 லட்சம்) ஆகியோர் உள்ளனர்.

இந்தியாவின் ஆகப் பணக்கார முதல்வரான சந்திரபாபு நாயுடு (வலது). திரிபுராவை ஆளும் மாணிக் சர்க்கார்தான் (இடது) பரம ஏழை முதல்வர். படம்: இந்திய ஊடகம்