விஜயகாந்த்: கழகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவோம்

விஜயகாந்த்: கழகத்தையும் நாட்டையும் காப்பாற்றுவோம்

1 mins read
Google News Preferred Icon

சென்னை: நல்ல எண்ணங் களோடு கழகத்தையும் நாட்டையும் காப்பாற்ற உறுதியேற்போம் என தேமுதிக கொடி நாளையொட்டி அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில், எந்த ஒரு கட்சியிலும் இல்லாத பெருமையாக தேமுதிக மட்டுமே கட்சிக் கொடியின் அறிமுக நாளை ஆண்டுதோறும் விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். "நம் கொள்கைப்படி 'இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே' என இந்த நல்ல நாளில், நம்மால் இயன்ற உதவிகளை நம் மக்களுக்கு வழங்குவோம்," என்று விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.