சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த 30 வயதான ராதா, சென்னை யில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் புறநகர்ப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற போது சிலர் அவரது தலையின் பின்புறம் தாக்கி உள்ளனர். இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தவரை, அவர்கள் சாலையோரம் உள்ள புதருக்குத் தூக்கிச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ராதா அணிந்திருந்த 15 பவுன் தங்கச் சங்கிலி, 2 விலையுயர்ந்த கைபேசிகளையும் பறித்துச் சென்றுள்ளனர். நள்ளிரவு முதல் காலை வரை அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார் ராதா. தற்போது மருத்துவனையில் அவர் உயிருக்குப் போராடி வருகிறார்.
நகை பறிப்பு; பாலியல் துன்புறுத்தல்: உயிருக்குப் போராடும் பெண்
1 mins read

