ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி விடிய விடிய போராடிய கிராம மக்கள் கைது

1 mins read
5792cfd2-b7ef-4803-bc64-40bec40201bb
-

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலி யுறுத்தி தூத்துக்குடியில் நடை பெற்று வரும் போராட்டம் தீவிர மடைந்துள்ளது. இந்நிலையில் திங்கட்கிழமையன்று அ.குமரெட்டி யார்புரம் கிராம மக்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட தால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர். கைக் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களையும் போலி சார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் பல வகையிலும் பாதிக்கப்பட்டிருப் பதாக அ.குமரெட்டியார்புரம் கிராம மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். ஆலையில் இருந்து வெளி யேறும் நச்சுப்புகையால் தோல் நோய், கருச்சிதைவு, புற்றுநோய் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற் படுவதாக கிராம மக்கள் கூறுகின் றனர். எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்யப்போவதாக அதன் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி யில் போராட்டங்கள் வெடித்துள் ளன. திங்கட்கிழமை தொடங்கிய இப்போராட்டம் அன்று இரவும் நீடித்தது. போலிசார் கைது செய்யப் போவதாக எச்சரித்தும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை. இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைக் குழந்தைகளுடன் வந்த பெண்க ளையும் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனமும் எதிர்ப்பும் எழுந்துள்ளது.

விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட குமரெட்டியார்புரம் கிராம மக்கள். படம்: தகவல் ஊடகம்