நான் ஒன்றும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை: பினு கெஞ்சல்

நான் ஒன்றும் பெரிய ரவுடியெல்லாம் இல்லை: பினு கெஞ்சல்

2 mins read
34cd074a-5c38-4b59-b1a0-63a3a6fd3ae7
-

சென்னை: தமிழக காவல்துறையால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி பினு சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். அவரிடம் போலி சார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக் கின்றன. இந்நிலையில் காவல்துறை கருதுவதைப் போல் தான் பெரிய ரவுடி அல்ல என்றும், போலிசாரிடம் இருந்து தப்பிக்க கடந்த சில தினங்களாக காரிலேயே சுற்றிக் கொண்டிருந்ததாகவும் ரவுடி பினு தெரிவித்துள்ளார். போலிசில் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் காணொளித் தொகுப்பு தற்போது வெளியாகியுள் ளது. அதில் போலிசார் தன்னை மன்னிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

"எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. ஐம்பது வயதாகிவிட்டது. போலிசார் நினைப்பது போல நான் ஒன்றும் பெரிய ரவுடி அல்ல. எனவே என்னை மன்னித்து விடு விக்க வேண்டும். "நண்பர்களுடன் சேர்ந்து நிறைய ரவுடித்தனம் செய்துவிட் டேன். இப்போது திருந்தி வாழ நினைக்கிறேன். அதனால்தான் கடந்த 3 ஆண்டுகளாக தலை மறைவாக இருந்தேன்," எனக் கூறி உள்ளார் பினு. பிரபல ரவுடிகளான பினுவுக்கும் ராதாகிருஷ்ணன் என்பவருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இதையடுத்து ரவுடி ராதா கிருஷ்ணனைத் தீர்த்துக்கட்ட பினு தரப்பினர் முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று சென்னையின் புற நகர்ப் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார் பினு. இதைய டுத்து அதிரடி நடவடிக்கை மேற் கொண்ட போலிசார் பண்ணை வீட்டைச் சுற்றி வளைத்து 70க்கும் மேற்பட்ட ரவுடிகளைக் கைது செய்தனர்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தனது கூட்டாளிகள் சிலருடன் ரவுடி பினு. படம்: தமிழக தகவல் ஊடகம்